search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்களை அனுபவம் இல்லாத டிரைவர்கள் ஓட்டுவதால் உயிருக்கு ஆபத்து: தொ.மு.ச. தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
    X

    அரசு பஸ்களை அனுபவம் இல்லாத டிரைவர்கள் ஓட்டுவதால் உயிருக்கு ஆபத்து: தொ.மு.ச. தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

    அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்குவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து என தொ.மு.ச. தொழிற்சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
    சென்னை:

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று எழும்பூரில் உள்ள எச்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

    போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது பணத்தைத்தான் அரசிடம் எதிர்பார்க்கிறார்கள். அதை கொடுப்பதற்கு அரசுக்கு என்ன தயக்கம்? பலகட்ட பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால் அரசு உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் தொழிற்சங்கத்தினர் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்போது அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குகிறார்கள். அந்த டிரைவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது.

    அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து. பயணிகளின் உயிரோடு அரசு விளையாடுவதா? நாங்கள் கடைசி வரை போராடுவோம். போராட்டத்தில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×