search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட்டில் புதிய சோதனை சாவடி: சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சோதனை
    X

    கொடநாடு எஸ்டேட்டில் புதிய சோதனை சாவடி: சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சோதனை

    கொடநாடு எஸ்டேட்டில் கெரடாமட்டம் என்ற இடத்தில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
    ஊட்டி:

    கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த மாதம் 24-ந்தேதி இரவு 11 கொள்ளையர்கள் புகுந்தனர். கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளிகள் ஓம்பகதூர், கிருஷ்ணபகதூரை தாக்கினர்.



    இதில் ஓம்பகதூர் இறந்தார். பின்னர் கொள்ளையர்கள் ஜெயலலிதா, சிசிகலா அறைகளை உடைத்தனர். ஆவணங்கள் இருந்த அறையையும் உடைத்து கொள்ளையடித்தனர்.

    ஜெயலலிதா அணிந்த 5 கைகடிகாரங்கள் மற்றும் ஒரு அலங்கார பொருட்கள் கொள்ளை போனதாக போலீசார் கூறினர்.

    விசாரணையில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜ் உள்பட 11 பேர் என்று தெரியவந்தது.

    இதில் கனகராஜ் கார் விபத்தில் இறந்து விட்டார். அவரது நண்பர் சயன் கார் விபத்தில் சிக்கி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள குட்டி என்ற ஜிஜின் என்பவரை போலீசார் கேரளாவில் தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் கொடநாட எஸ்டேட் பங்களா 7, 8, 9 ஆகிய நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, துணை சூப்பிரண்டு பாஸ்கர், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தவிர கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து லேண்டு லைன் மற்றும் செல்போன் அழைப்புகள் குறித்து இன்ஸ்பெக்டர் தலைமையில் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    கொடநாடு எஸ்டேட்டில் கெரடாமட்டம் என்ற இடத்தில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    Next Story
    ×