search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் மீது கவர்னர் கிரண்பேடி கடும் தாக்கு
    X

    எம்.எல்.ஏ.க்கள் மீது கவர்னர் கிரண்பேடி கடும் தாக்கு

    மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மக்கள் பிரதிநிதிகள் செய்யவில்லை என எம்.எல்.ஏ.க்கள் மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

    அதேபோல இன்றைய தினம் சமூக தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நான் 74-வது வாரங்களாக கிராமப்பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளேன். அந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எந்தவித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் கிராமப்புற பகுதிகள் சுத்தமின்றியும், சுகாதாரமின்றியும் உள்ளது. குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. அதிகாரிகளும் மக்களோடு மக்களாக இணைந்துபணி யாற்றவில்லை.

    மக்களோடு நடந்து சென்றோ, இருசக்கர வாகனங்களில் சென்றோ செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவில்லை. இவ்வாறு ஆய்வு செய்யும் அதிகாரிகளும் அவமதிக்கப்படுகின்றனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். கடமையை செய்த அதிகாரிகள் தங்கள் நேர்மையை வெளிக்காட்ட நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.

    இதனால் நேர்மையான அதிகாரிகளின் குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். செயல்படாத அதிகாரிகளை மாற்ற துணிச்சல் தேவை.

    புதுவை மக்கள் கற்றறிந்தவர்கள். மாற்றத்தை அவர்கள் விரும்புகிறார்கள். தேவையான மாற்றத்தை அதிகாரிகள்தான் அளிக்க வேண்டும். இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

    இந்த மாற்றம் ஏற்படாவிட்டால் முன்மாதிரி மாநிலங்கள் பட்டியலில் புதுவை இடம்பெறாது. புதுவை மாநிலம் சிறப்பாக இருக்க கிராமப்புறங்களில் சுகாதாரம் அவசியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கவர்னர் கிரண்பேடி மக்கள் பிரதிநிதிகள் என்று எம்.எல்.ஏ.க்களையே குறிப்பிட்டு இருப்பதாக கருதப்படுகிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்களை மக்கள் பிரதிநிதிகள் என்று அழைப்பது வழக்கம்.

    ஆனால், தற்போது புதுவையில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லை. எனவே, கவர்னர் மக்கள் பிரதிநிதி என்று குறிப்பிட்டு இருப்பது எம்.எல்.ஏ.க்களையே சுட்டிக்காட்டுகிறது.
    Next Story
    ×