search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண்
    X

    விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண்

    விழுப்புரம் அருகே காணையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. எம்.ஏ.பி.எட்.படித்துள்ளார். இவர் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே திருக்கோவிலூர் அருகே உள்ள சின்ன இடையாறு கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகள் ஆனந்தி பி.எஸ்.சி.பி.எட். பட்டதாரி.

    ஆனந்திக்கும் வேலுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் இன்று காலை விழுப்புரம் அருகே காணையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    ஆனந்தி ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். எனவே இன்று காலை திருமணம் முடிந்ததும் அவர் நாராயணன் நகரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருடன் அவரது கணவர் வேலுவும் வந்திருந்தார்.

    தேர்வு அறைக்கு சென்று ஆனந்தி தேர்வு எழுதினார். தேர்வு அறைக்கு வெளியே மண மகன் வேலு காத்திருந்தார்.

    இதுகுறித்து ஆனந்தியின் தாயார் கிரிஜா கூறும்போது:-

    எனது மகள் எப்போதும் படித்து கொண்டே இருப்பார் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். இன்று காலை திருமணம் முடிந்ததும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவேன் என்று கூறினார். அவர் ஆசையை நிறைவேற்ற இன்று மணக்கோலத்தில் தேர்வு எழுத அழைத்து வந்தோம் என்றார்.

    Next Story
    ×