search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி பகுதிகளில் நுங்கு விற்பனை ஜோர்
    X

    போச்சம்பள்ளி பகுதிகளில் நுங்கு விற்பனை ஜோர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நுங்கு விற்பனை தொடங்கியுள்ளது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நுங்கு விற்பனை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பேச்சம்பள்ளி பகுதிகளில் 100 டிகிரி என வெப்பம் அதிகரித்து வருகிறது. காலை 10:00 மணிக்கு சுட்டெரிக்க துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை 4:30 மணிக்கு பிறகே குறைய துவங்குகிறது.

    இதனால் பகல் நேரத்தில் வெளியே பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. வெப்ப பாதிப்புகளில் இருந்து தப்ப குளர்ச்சி தரும் இளநீர், வெள்ளரி, தர்பூசணி, கம்மங்கூழை பழரசங்கள், மக்கள் விரும்பி உண்கின்றனர்.

    மற்றொரு பனை பொருளான நுங்கு விற்பனையும் தற்போது போச்சம்பள்ளி, அரசம்பட்டி, புலியூர், பகுதியில் நுங்குகள் தற்போது போச்சம்பள்ளி இருந்து தருமபுரி செல்லும் சாலை ஓரங்களில் விற்க தொடங்கியுள்ளனர்.

    வியாபாரிகள் கூறுகையில், போச்சம்பள்ளி, பகுதியில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சரிவர மழையில்லை. இதனால் மரங்கள் வளர்ச்சியின்றி பாதிப்படைந்துள்ளது. மேலும் இந்த பகுதிகளில் பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு அனுப்பி விடுவதால் பனைமரங்கள் குறைந்து வருகின்றன.

    இதன் காரணமாக நுங்கு எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறோம்  என்று வியாபாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×