search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதி ரமேஷ் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எடுத்த படம்.
    X
    ஜோதி ரமேஷ் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போது எடுத்த படம்.

    கோவில்பட்டியில் 120 அடி உயர டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

    கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டங்குளத்தில் 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ் (வயது 21). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென ஜோதி ரமேசை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் ஜோதி ரமேஷ் இன்று காலை கோவில்பட்டி அனுமன் நகரில் உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் என்னை தாக்கியர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என கூறினார்.

    இதைகேட்ட அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் என்னை தாக்கியவர்களை உடனே கைது செய்தால் தான் கீழே இறங்குவேன் என கூறினார். பின்னர் சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்போன் கோபுரத்தில் இருந்து ஜோதி ரமேஷ் கீழே இறங்கி வந்தார். வாலிபரின் தற்கொலை மிரட்டல் போராட்டத்தால் கோவில்பட்டியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×