search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது
    X

    ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது

    ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

    எனவே ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான தாள்1-க்கு 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட். முடித்தவர்களுக்கான தாள்-2க்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்தனர்.

    அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ள தேர்வர்களுக்கு நாளையும்(சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுகிறது. நாளை தாள்-1 தேர்வு 598 மையங்களிலும், நாளை மறுநாள் தாள்-2 தேர்வு 1,263 மையங்களிலும் நடைபெறுகிறது.

    தேர்வு நடைபெறுவதை கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியை கண்காணிப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

    இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன் பிறப்பித்துள்ளார். 
    Next Story
    ×