search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

    அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 60 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், தி.நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகளை அடைத்து விட்டு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார்.

    தென்சென்னை மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ்.சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை மணி, காஞ்சி வி.ஏ.கருணாநிதி, டி.ஏ.சண்முகம், பூக்கடை ராஜேந்திரன்,ரெட்டேரி ஜோதிராமன், துரை மாணிக்கம், பரமசிவம், தெய்வ சிகாமணி, வேளச்சேரி சுந்தர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின்போது சங்க தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-

    நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். தற்போது விவசாய தொழில் அனைத்தும் அழிந்து வருகின்றன. உலக வர்த்தக ஒப்பந்தத்தால் சில்லரை வர்த்தக தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சியாளர்களின் தவறான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளால் நாடு அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. உள் நாட்டு தொழிலையும், சுய தொழில்களையும் மீண்டும் மீட்க வேண்டும். வருகிற மே 5-ந்தேதி தீவுத்திடலில் நடைபெறும் மாநாட்டில் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத் துக்கும் மேற்பட்ட வியாபாரிகள கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×