search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மணி நேரம் பொதுமக்கள் போராட்டம்
    X

    வெங்கல் அருகே புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மணி நேரம் பொதுமக்கள் போராட்டம்

    வெங்கல் அருகே புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மணி நேரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையால் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம்மாம் பள்ளம் ஊராட்சியை சேர்ந்த காதர்வேடு கிராமத்தில் பாகல்மேடு-செம்பேடு நெடுஞ்சாலையில் வெங்கல்லில் இருந்து அகற்றப்பட்ட அரசு மதுபான கடையை கடந்த 8-ந்தேதி திறந்தனர்.

    இதனை அறிந்த காதர் வேடு, செம்பேடு பெண்கள் அன்றே கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி அந்த கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் அப்போது உறுதி கூறினர்.ஆனால் அந்த கடையை அந்த பகுதியில் இருந்து அதிகாரிகள் அகற்ற வில்லை.

    இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு காதர்வேடு, செம்பேடு பெண்கள் பாகல் மேடு - செம்பேடு நெடுஞ் சாலையில் இருந்த அந்த அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் விரைந்து வந்து பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால், பெண்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிட முடியாது என்று உறுதியுடன் கூறினர். மேலும், தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

    பின்னர், ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    பெண்கள் தங்களது கோரிக்கை நிறைவேற சிறை செல்லவும் தயாராக உள்ளதாக உறுதியுடன் கூறினர். பின்னர், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரியிடம் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பேசினர் அப்போது அந்த பகுதியில் இருந்து கடையை உடனடியாக அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரி கூறினார் என்று வருவாய் ஆய்வாளர் கண்ணன் பெண்களிடம் கூறினார்.

    இதனால் நேற்று இரவு 7 மணிக்கு பெண்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன்பின் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள மாம்பள்ளம் ஊராட்சியில் கடந்த 8-ந் தேதி அரசு மதுபான கடை திறக்கப்பட்டது.இதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிப்பு தெரிவித்தனர்.

    வெங்கல்-கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கடையின் அருகே தனியார், அரசு பள்ளிகள் உள்ளது. ரே‌ஷன் கடைகளுக்கு இவ்வழியே சென்று வர வேண்டும்.மேலும்,பஸ் நிலையம் சென்று வருபவர்களும் இந்த சாலை வழியாகதான் சென்று வர வேண்டும்.

    இந்நிலையில் இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி நேற்று மீண்டும் மாம் பள்ளம், வெங்கல்குப்பம், காவனூர், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பெண்கள் கடையின் எதிரே ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×