search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம்

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக 2 மணிநேரம் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சையில் தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் நகர டெப்போவில் இருந்து பஸ்களை காலை 4 மணி முதல் 6 மணி வரை இயக்காமல் நுலைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை தலைவர் யெவேல் முருகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் துரை.மதிவாணன், டி.எம்.எம்.கே பொதுசெயலாளர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி சுப்பிரமணியன், சரவணன், சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன், அம்பேத்கர் சங்க பொதுசெயலாளர் இளங்கோவன், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லிதியாகராஜன், பொதுச்செயலாளர் அப்பாதுரை, அதிகாரிகள் நலசங்க நிர்வாகி சந்திரமோகன், வரதராஜன், அருள் உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பேசி முடிக்க வேண்டும், 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணபயன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    போக்குவரத்து ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் தஞ்சை நகர போக்குவரத்து கிளை பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

    Next Story
    ×