search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மாணவர் வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் நெளிந்த புழு
    X

    கோவையில் மாணவர் வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் நெளிந்த புழு

    கோவை கணபதி அருகே மாணவர் வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் புழு நெளிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தொழிலாளி.

    இவரது மகன் தீபன் சக்கரவர்த்தி(வயது 15) 10-ம் வகுப்பு படிக்கிறார். இவர் அப்பகுதியில் தள்ளு வண்டியில் வந்த ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரிடம் ரூ.25 கொடுத்து கோன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டார்.

    அப்போது ஐஸ்கிரீமில் புழு நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இதுபற்றி தனது தந்தையிடம் கூறினார். தீபன் சக்கரவர்த்தி வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீம் நிறுவனம் அந்த பகுதியிலேயே உள்ளது. எனவே காளிமுத்து அந்த நிறுவனத்துக்கு நேரில் சென்று புகார் செய்தார். ஆனால் ஐஸ்கிரீம் நிறுவன ஊழியர்கள் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அவர் ரேஸ்கோர்சில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய அலுவலரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×