search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டராம்பட்டு அருகே புதிய டாஸ்மாக் கடை திறந்ததால் மது பிரியர்கள் உற்சாகம்
    X

    தண்டராம்பட்டு அருகே புதிய டாஸ்மாக் கடை திறந்ததால் மது பிரியர்கள் உற்சாகம்

    தண்டராம்பட்டு அருகே புதிய டாஸ்மாக் கடை திறந்ததால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள 19 டாஸ்மாக கடைகளில், 15 கடைகள் மூடப்பட்டன.

    அதைத் தொடர்ந்து வாணாபுரம், குங்கிலியநத்தம், வாழவச்சனூர் உள்ளிட்ட பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் டாஸ்மாக கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு பகுதியில் டாஸ்மாக கடைகளுககு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடைதிறக்க கட்டிடம் கட்டும் பணி நடந்தது. அவையும் பொதுமக்களின் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.

    வாணாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் டாஸ்மாக கடைகள் இல்லாததால் மதுபான பிரியர்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் வாழவச்சனூர தென்பெண்ணையாற்றின் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதையறிந்த மதுபான பிரியர்கள் கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    வாணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான வாழவச்சனூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு, மேலந்தல், காங்கையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மதுபான பிரியர்களும் வாழவச்சனூர் தென்பெண்ணையாற்றின் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானது என டாஸ்மாக் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×