search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுடன் தங்கம்
    X
    குழந்தைகளுடன் தங்கம்

    இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் ராமேசுவரம் வந்த பெண் போலீசார் தீவிர விசாரணை

    கள்ளத்தோணி மூலம் 3 குழந்தைகளுடன் ராமேசுவரம் வந்த பெண்ணை கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இந்தியாவிற்கு சிலர் அகதிகளாக வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கம்போல் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்தபோது தனுஷ்கோடி 1-ம் மணல் திட்டு பகுதியில் ஒரு பெண் 3 குழந்தைகளுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலோர காவல்படை காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த பெண் மற்றும் 3 குழந்தைகளை மீட்டனர்.

    அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் தூத்துக்குடியை சேர்ந்த தங்கம் என்பதும், தற்போது இலங்கையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் ராமேசுவரம் வந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    இலங்கை பண்டாரநாயக் புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் வரன் (வயது35), சுற்றுலா விசாவாக இந்தியா வந்த போது தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த தங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறி 2010-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர் 2013-ம் ஆண்டு விமானம் மூலம் இலங்கை சென்று அங்கு வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சரியாக வேலைக்கு செல்லாத விக்னேஷ்வரன் குடிபழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு விக்னேஷ்வரன் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டார்.

    ஆதரவின்றி தவித்த தங்கம், மகள்கள் லத்திகா (5), அஜய் சினேகா (4), மகன் சுபீசன் (2) ஆகியோருடன் கள்ளத்தோணி மூலம் ராமேசுவரம் வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    Next Story
    ×