search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மீண்டும் சிகிச்சை
    X

    மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மீண்டும் சிகிச்சை

    விஜயகாந்துக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மியாட் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒருநாள் மட்டுமே பிரசாரம் செய்தார்.

    இதற்கிடையில் விஜயகாந்துக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மியாட் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் கனகராஜ் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டார்.


    இதையடுத்து இன்று விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    Next Story
    ×