search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே நள்ளிரவில் காரில் வந்த மருந்துக்கடை அதிபர் உள்பட 3 பேர் கடத்தல்
    X

    ஓமலூர் அருகே நள்ளிரவில் காரில் வந்த மருந்துக்கடை அதிபர் உள்பட 3 பேர் கடத்தல்

    ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் பிரிவு ரோட்டில் சேலத்தில் இருந்து காரில் வந்த இருவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்தவர்கள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    ஓமலூர் டி. எஸ். பி .சந்திரசேகரன் , ஓமலூர் இன்ஸ்பெக்டர் மோகன், தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் குமரன், மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் காரில் கடத்தி சென்ற நபர்கள் யார், கடத்தப்பட்டவர்கள் யார் என்று தெரியாமல் இருந்தது.

    மேலும் கடத்தப்பட்டவர்கள் வந்த காரை அங்கே யே விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அந்த காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர், விசாரணையில் கடத்தப்பட்ட 3 பேரும் வந்த கார் தாரமங்கலம் அருகே உள்ள சீராய்கடை பகுதியை சேர்ந்த கணேஷ் கந்தன் என்பருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

    மேலும் காரில் வந்தவர்களை கடத்தி சென்றது ஆந்திர மாநில போலீசாராக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். மேலும் கடத்தப்பட்டவர்கள் வந்த காரின் உரிமையாளர் கணேஷ் கந்தன் என்பவரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கணேஷ் கந்தனின் நண்பரும், நாமக்கல்லில் மருந்துக்கடை வைத்து உள்ளவருமான முத்துசாமி (65) மற்றும் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் ,தங்கராஜ் ஆகிய 3 பேரும் கணேஷ் கந்தனின் காரில் ஓமலூருக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது தாரமங்கலம் பிரிவு ரோடு அருகே வந்த போது அடையாளம் தெரியாதவர்கள் காரில் வந்த மூன்று பேரையும் கடத்தி விட்டதாக கணேஷ் கந்தன் தெரிவித்து உள்ளார்.

    தொழில் போட்டியின் காரணமாக இவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் அல்லது செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதால் ஆந்திர போலீசார் இவர்களை விசாரணைக்கு அழைத்து சென்று இருக்கலாம் என்றும் ஓமலூர் போலீசார் கருதுகிறார்கள்.இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகின்றது.

    விசாரணைக்குப்பிறகுதான் அவர்கள் 3 பேரும் உண்மையில் கடத்தப்பட்டார்களா? அல்லது ஆந்திர போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றார்களா என்பது தெரியவரும்.

    Next Story
    ×