search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்: நடிகர் ராதாரவி பங்கேற்பு
    X

    மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்: நடிகர் ராதாரவி பங்கேற்பு

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகர தி.மு.க கழகம் மற்றும் மாநில விவசாய தொழிலாளர் அணி சார்பில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பா.அருண்குமார் தலைமை வகித்து பேசினார். முன்னாள் நகர செயலாளர் எம்.அப்துல் அமீது, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அசரப்அலி, ஆர்.மனோகரன், அமரன், ராஜலட்சுமி, அப்துல் சுக்கூர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சி.மு.யூனூஸ் நகர அவைத் தலைவர் சி.தமிழ்மணி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காரமடை ஒன்றிய செயலாளர் சு.சுரேந்திரன், தலைமை பேச்சாளர்கள் காரை.சுந்தர்ராஜ், முருகேசன் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் புருசோத்தமன், டி.ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், சிறுமுகை உதயகுமார், மு.முபாரக், முனுசாமி, மற்றம் தி.மு.க வினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர பொருளாளர் ஜாஹீர் உசேன் நன்றி கூறினார்.

    Next Story
    ×