search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி.
    X
    கொள்ளை நடந்த வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி.

    கோவில்பட்டியில் கால்நடை மருத்துவர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை

    கோவில்பட்டியில் கால்நடை மருத்துவர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சீனிவாசநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமையா (வயது 60). ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் நேற்று இரவு ராமையா கோவில்பட்டிக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 28 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி., வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் காணவில்லை. ராமையா குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை- பணம், டி.வி., மோட்டார் சைக்கிள் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமையா கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.

    கோவில்பட்டி பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் துணிகர கொள்ளைக் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை- பணம் கொள்ளை போயுள்ளது. தொடரும் இந்த கொள்ளை சம்பவங்களால் கோவில்பட்டி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் தீவிரமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×