search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
    X

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

    சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
    சென்னை:

    கடந்த 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகுந்திராபாத் நகரில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன் ஆகும். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், சென்னைக்கு வந்த அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக களமிறங்கினார்.

    இந்நிலையில், 85 வயதான அசோகமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், அப்பாவின் சினேகிதர், ஒற்றன் போன்ற நாவல்களை அசோகமித்ரன் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 15 கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.

    இதில் அப்பாவின் சினேகிதர் நாவல் 1996-ம் ஆண்டிற்கான ’சாகித்ய அகாடமி’ விருதை பெற்றுள்ளார். மேலும், தண்ணீர் நாவல் வாசகர்களிடம் மிகப் பிரபலமானவை ஆகும். ’இலக்கியச் சிந்தனை’ விருதையும் இருமுறை வென்றுள்ளார்.
    Next Story
    ×