search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த கல்லூரி மாணவி
    X

    சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த கல்லூரி மாணவி

    சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    அகமதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்து இருந்தனர். நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.

    உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.

    ஏற்கனவே விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது லேசாக கை பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் கன்னத்தில் அறைந்தார்.

    இதுகுறித்து விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளும், சப்-இன்ஸ்பெக்டரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக செல்வதாக கூறினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×