search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்
    X

    கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

    கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. 26 பணியிடங்களுக்கு நடந்த இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    கோவை:

    கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில 110-வது பிரதேச ராணுவ படைக்கு வீரர்கள் சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, குஜராத், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களான கோவா, டாமன் டையூ, டார்டா, நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள் , புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.

    கலோனெல் லோகநாதன் தலைமையில் வீரர்கள் தேர்வு நடந்தது. மொத்தம் 26 பணியிடங்களுக்கு நடந்த இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    தேர்வில் பங்கேற்ற வீரர்களுக்கு உயரம் சோதிக்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் தகுதியிழந்து வெளியேறினர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு மார்பளவு பரிசோதனை, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட தகுதி தேர்வுகளும், சான்றிதழ் சரி பார்ப்பும் நடைபெற்றது.

    இவற்றில் தேர்வு பெறுபவவர்களுக்கு நாளை (செவ்வாய்க் கிழமை) முதல் 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

    முன்னதாக, ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக நேற்று மாலையில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த வீரர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் அருகே குவிந்தனர். தங்களுக்கு எந்தவித இட வசதியும் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்த அவர்கள் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கினர்.

    நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் வ.உ..சி. மைதானம், ஓசூர் சாலையில் உள்ள பிளாட்பாரத்திலும் படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டது. கொசு தொல்லை, குளிர் காரணமாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×