search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவடி-செங்கல்பட்டில் உண்ணாவிரதம்
    X

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவடி-செங்கல்பட்டில் உண்ணாவிரதம்

    ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருநின்றவூர்:

    திருவள்ளூர் மாவட்டம் சார்பில் ஆவடி நக ராட்சி அலுவலகம் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான மா.பா.பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

    அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்யனார், ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மைக்கேல் ராஜ், ஏ.ரபி, திருவள்ளூர் நகரமன்ற முன்னாள் தலைர் கமாண்டோ பாஸ்கர் உள்ளிட்ட சுமார் ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு பேசினார்.

    ஊத்துக்கோட்டையில் இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட் டோர் ஊர்வலமாக வந்தனர். கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் கவுன்சிலர்கள் அண்ணாதுரை, முருகேசன், டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டு ஆவடியில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது. மைத்ரேயன் எம்.பி. தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.என்.டி. வெங்கடேசன், ஜெயபாலாஜி, முன்னாள் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் குமாரசாமி, மு.காமராஜ், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், பெரும்பாக்கம் ராஜசேகர், ரங்கராஜன் என்கிற பாலு, பொதுக்குழு உறுப்பினர் கிருபாநிதி உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×