search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு, பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியதே சசிகலா தான்: சி.ஆர்.சரஸ்வதி
    X

    ஜெயலலிதாவுக்கு, பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியதே சசிகலா தான்: சி.ஆர்.சரஸ்வதி

    ஜெயலலிதாவுக்கு, பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியதே சசிகலா தான் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பேசியுள்ளார்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகர செயலாளர் வான்மதி சேட் தலைமை தாங்கினார். ஐ.டி.எஸ். அமானுல்லா, வெள்ளியங்கிரி, எல்.எஸ். புரம் ரவி, தமிழகம் சேட், சந்தானம் , டி.டி.ஆறு முகச்சாமி, அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவை தலைவர் சுப்பையன் வரவேற்றார்.

    கூட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டி காத்த அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஸ்டாலின், ஜெயலலிதாவை கொலை குற்றவாளி என்று கூறினார். அதன் பின்னராவது ஓ.பன்னீர் செல்வம் , ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. உள்பட மற்றவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கூறவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதே சசிகலா தான். வெற்றி, தோல்வி, இன்ப- துன்பங்களில் பங்கு கொண்டவர் சசிகலா. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சின்னம்மா என அழைக்க சொன்னவர் ஜெயலலிதா தான்.

    அ.தி.மு.க.வை குடும்ப கட்சி என்று சொல்கிறார்கள். ஆமாம். நாங்கள் ஒரே குடும்பம் தான். பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். அணியினர் தாய் கழகத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் பெற முடியாது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்திட அனைவரும் ஒற்றுமையாக பாடு பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×