search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் 2 மாதத்தில் மெட்ரோ ரெயில் ஓடும்
    X

    திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் 2 மாதத்தில் மெட்ரோ ரெயில் ஓடும்

    திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் 2 மாதத்தில் மெட்ரோ ரெயில் ஓடும். வண்ணாரப்பேட்டை-சென்டிரல் சுரங்கப் பாதை பணி நிறைவடைந்தது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரல் நிலையம் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

    மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தில் உயர்மட்ட பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இதில் முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    கோயம்பேடு - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சுரங்கப் பாதையில் இன்னும் மெட்ரோ ரெயில் இயக்கப்படவில்லை.

    சுரங்கப் பாதையில் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமங்கலம் - நேரு பூங்கா இடையே பணிகள் நிறைவடைந்து வருகின்றன. எழும்பூர்- நேரு பூங்கா, சென்ட்ரல் - எழும்பூர் என பல்வேறு சுரங்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


    வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் இடையேயான சுரங்கம் தோண்டும் பணி இன்று நிறைவடைந்தது. 3.4 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாதையில் டனல் போரிங் மூலம் கடந்த சில ஆண்டுகளாக சுரங்கம் தோண்டும் பணி நடந்து வந்தது. இந்த பணி இன்று காலை சென்ட்ரல் நிலையம் அருகில் நிறைவடைந்தது.

    தரை மட்டத்தில் இருந்து 28 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரை தோண்டப்பட்டு வந்த இந்த பணி காலையில் நிறைவு பெற்றவுடன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த பாதையில் சுரங்கம் தோண்டும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர்.

    சுரங்கப் பணி நிறைவு பெற்றதையொட்டி அதை காண்பிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பத்திரிகையாளர்களை அழைத்து சென்றது. அப்போது தலைமை பொது மேலாளர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் சுரங்கம் தோண்டும் பணி இன்று நிறைவடைந்தது. இந்த பணியினை ஊழியர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

    இதையடுத்து தண்டவாளம் அமைக்கும் பணி, மின்சார கம்பம் மற்றும் ரெயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெறும். முதல் வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறை வடைந்தது.

    ஆயிரம்விளக்கு- டி.எம்.எஸ். வரை சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

    2-வது வழித்தடத்தில் திருமங்கலம் - நேரு பூங்கா இடையே ரெயில் நிலையம், பயணிகள் வசதிகள் உள்ளிட்ட பணிகளும் நிறைவடைந்து வருகிறது. 2 மாதத்தில் அந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    2018 முதல் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×