search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்-ஜெ.தீபா பற்றி யாராவது பேசினால் தொகுதிக்குள் நுழைய முடியாது: பி.ஆர்.சுந்தரம்
    X

    ஓ.பன்னீர்செல்வம்-ஜெ.தீபா பற்றி யாராவது பேசினால் தொகுதிக்குள் நுழைய முடியாது: பி.ஆர்.சுந்தரம்

    ஒ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் பற்றி யாராவது பேசினால் தொகுதிக்குள் நுழைய முடியாது என்று பி.ஆர்.சுந்தரம் எம்.பி. கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராசிபுரம்:

    முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முதன் முதலாக ராசிபுரம் வந்தார்.

    அவருக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு அவர் அ.தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    முதன் முதலாக என்னை வெற்றி பெற செய்து அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ராசிபுரம் தொகுதி மக்களுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி ஒரு குடும்பத்தின் கைக்கு செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் நிற்கின்றோம். இப்போது சசிகலாவின் ஆட்சி நடந்து வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி பினாமி முதல் அமைச்சர் ஆக உள்ளார்.

    சசிகலாவின் காலில் விழும் ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான சரோஜாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையா? ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான சரோஜா ராசிபுரத்தில் இருக்காமல் சங்ககிரிக்கு சென்றுவிடுவது ஏன்? அதே போல் ஏற்கனவே ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சபாநாயகர் தனபால் தொகுதி பக்கம் வந்திருப்பாரா? இங்கு ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட அருந்ததியர்கள், ஆதிதிராவிடர் மக்கள் வந்திருக்கிறீர்கள். அவர் உங்களுக்காக எதாவது செய்தாரா? சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் என்னென்ன செய்தார்கள் என்ற ஆவணம் என்னிடம் உள்ளது. அதை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கூறுவேன்.

    சசிகலா பொதுச்செயலாளர் ஆகியிருப்பது செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் கமி‌ஷனில் மனு அளித்திருக்கிறோம். அது பற்றி விரைவில் நல்ல தீர்ப்பு வரும். ஒ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் பற்றி யாராவது பேசினால் தொகுதிக்குள் நுழைய முடியாது. இந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என அமைச்சர் தங்கமணி தடுத்தி நிறுத்தி உள்ளார். இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்துள்ளீர்கள். அழைத்து வந்த கூட்டம் அல்ல. தானாவே வந்த கூட்டம். யாரையும் நாம் குறை கூற வேண்டாம். வருபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஒ.பன்னீர்செல்வத்தின் ஜெயலலிதா அணியில் இருப்பவர்கள் தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று சேர்மன் ஆகவும், நகர்மன்ற தலைவராகவும், மேயராகவும், பேரூராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிக்க போகிறார்கள். சசிகலா அணியில் எவரும் வெற்றி பெற மாட்டார்கள். அவர்கள் அணியில் சீட்டு கேட்கவே ஆள் இல்லை. சிலர் ஜெ.தீபாவும், ஓ. பன்னீர்செல்வமும் வெவ்வேறு அணி என கூறி தேவையற்ற பிரச்சினையை செய்வார்கள். இரண்டு அணியும் ஒரே அணி தான். இவ்வாறு பி.ஆர்.சுந்தரம் எம்.பி. கூறினார்.
    Next Story
    ×