search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
    X

    முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    விழுப்புரம்:

    தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டசபை விதிகளை மீறி நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம் இன்று நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளருமான பொன்முடி தலைமைதாங்கி பேசினார். மாவட்ட அவைத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ராதாமணி முன்னிலை வகித்தார்.


    மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை நிலைய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகர சபை தலைவருமான ஜனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், கலிவரதன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் திண்டிவனம் வ.உ.சி.திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் கபிலன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், சொக்கலிங்கம், நிர்வாகிகள் ரமணன், டாக்டர். சேகர், வக்கீல்கள் அசோகன், ஆதித்தன், முத்து மற்றும் செல்வராஜ், கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×