search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
    X

    சென்னையில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

    சென்னையில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி நேற்று இரவு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சென்னை:

    ஜெ.ஜெ.நகர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி திருமங்கலத்துக்கும், திருமங்கலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் ஜெ.ஜெ.நகருக்கும் மாற்றப்பட்டனர். மாம்பலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி நொளம்பூரில் பதவி ஏற்பார். கண்ணகிநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி மாம்பலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக செல்கிறார். மேரி ராஜூ போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், சுகிலா திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.

    இவர்கள் உள்பட 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். 
    Next Story
    ×