search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் சீர்கேடுகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்:  கே.என்.நேரு வேண்டுகோள்
    X

    தமிழக அரசின் சீர்கேடுகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்: கே.என்.நேரு வேண்டுகோள்

    தமிழக மக்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என். நேரு பேசினார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகம் இன்று மோசமான நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிலேயே கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.

    இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அவர்களுக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறுகிறார்கள். நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    அவர்களுக்கு ஆதரவாக உள்ள 124 எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் மாற்றி வாக்களித்தால் ஆட்சி முடிந்துவிடும். இந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விரும்பவில்லை.

    மக்களை சந்தித்து நேரடியாக முழு பலத்துடன் ஆட்சிக்கு வரும். இன்றைய அ.தி.மு.க. அரசு ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லை. உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்றவற்றில் ஆதரவு அளித்ததன் மூலம் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் எந்த பணிகளும், திட்டங்களும் நடைபெறவில்லை. திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணம் கொடுப்பதில்லை. பணப்பரிமாற்ற திட்டத்தால் கிராம மக்கள் வேலையில்லாமல் பணப் புழக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    கடந்த 1989-ம் ஆண்டு தமிழக அரசின் நிதிச்சுமை ரூ.25 ஆயிரம் கோடியாகத் தான் இருந்தது. ஆனால் இன்று ரூ.2 லட்சம் கோடியாக கடன் சுமை உயர்ந்துவிட்டது. இதற்கு அ.தி.மு.க. அரசின் செயல்பாடுதான் காரணம்.

    தமிழக அரசின் இந்த சீர்கேடுகளை தி.மு.க.வினர் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மாற்று கட்சியினரையும் தி.மு.க.வில் சேர்க்கவேண்டும். பொறுமையாக இருங்கள். தமிழக மக்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். வருகிற மார்ச் 1-ந்தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் கொடியேற்றி பொதுக் கூட்டங்கள் நடத்தவேண்டும். ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி மரக்கன்றுகள் நடவேண்டும். மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் நடத்தி கொண்டாடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடு வெட்டி தியாகராஜன், மாந கர செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பா ளர் பி.ஆர்.சிங்காரம், பொதுக்குழு உறுப்பினர் குண்டூர் மாரியப்பன்,

    மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் என் ஜினீயர் நித்தியானந்த், வண்ணை அரங்கநாதன், டோல்கேட் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், மண்டி சேகர், பாலமுருகன், மதிவாணன், மோகன் தாஸ்,

    விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கள் மூக்கன், ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், முத்துசெல்வம், கிராப்பட்டி செல்வம், லீலா வதி, துர்காதேவி, ராமமூர்த்தி, முன்னாள் கோட்ட தலைவர் குமரேசன், வட்ட பிரதிநிதி பந்தல்ராமு, மூவேந்திரன், வட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், மார்சிங் பேட்டை செல்வராஜ், ரெங்கா, துபேல் அகமது, வி.பி.குமார், எஸ்.வி.ஆர்.வரதராஜன், சிவ சக்திகுமார், இளைஞரணி நிர்வாகிகள் பொன்னகர் ஜெரால்டு, சுருளிராஜன், கமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×