search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆங்காங்கே மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆங்காங்கே மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 23 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், அம்பை 3 மில்லி மீட்டர், தென்காசி 3.2 மில்லி மீட்டர், நாங்குநேரி 2 மில்லி மீட்டர், ராமநதி 2 மில்லி மீட்டர், நெல்லை 1.2 மில்லி மீட்டர், சேரன்மகாதேவி 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 744.68 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 104.75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.30 அடியாக இருந்தது. இன்று 1½ அடி உயர்ந்து 51.75 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 49.38 அடி யாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 77.03 அடியாக உள்ளது.

    இன்றும் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    Next Story
    ×