search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
    X
    தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    கோவையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணி கூட்டம்

    தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவை சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகில் உள்ள ஜி.எஸ்.என். திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
    கோவை:

    தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவை சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகில் உள்ள ஜி.எஸ்.என். திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன், துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா சின்னியம்பாளையம் டி.ஏ.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கொடிசியாவில் நடைபெற்ற தி.மு.க. முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினரும், கிஸ்கால் குரூப் நிறுவனங்களின் தலைவருமான டி.எஸ்.பி. கண்ணப்பன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

     

    Next Story
    ×