search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடத்த புதிய மசோதா: தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு
    X

    ஜல்லிக்கட்டு நடத்த புதிய மசோதா: தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு

    சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வரைவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.முக. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏகள் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
    சென்னை;

    ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக புதிய நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

    ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.
    இதனால், அதை தொடர்ந்து தமிழக அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பித்தது.

    இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க அதன் சட்ட வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும்.
    அதற்கான சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில்  தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். சட்டசபை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்த மசோதா தாக்கல் ஆனது.

    ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிகமாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக புதிய நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கான அம்சங்கள் இந்த சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ளன.

    இந்த மசோதாவுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×