search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவசர சட்டம் பிரகடனம்: ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்து வந்த பாதை
    X

    அவசர சட்டம் பிரகடனம்: ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்து வந்த பாதை

    ஜல்லிக்கட்டு நடத்திடும் வகையில் தமிழகத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு நடத்திடும் வகையில் தமிழகத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்திட நிரந்த சட்டம் வேண்டும் அவசர சட்டம் வேண்டாம் என இளைஞர்கள் போராடிய நிலையில் தமிழகத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்து வந்த பாதை குறித்து இங்கே பார்ப்போம்.

    ஜனவரி 8: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வேண்டும் என மெரினா கடற்கரையில் சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் ஒன்றிணைந்து சிறியளவில் போராட்டம் நடத்தினர்.

    ஜனவரி 15: தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதனைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது.

    ஜனவரி 16: இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என விடிய, விடிய அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர்.

    ஜனவரி 17: அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் திரண்டு போராட்டம் நடத்தினர். பீட்டாவைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். முதலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் தொடங்கிய இந்த போராட்டம் சமூக வலைதளங்கள் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுடன் பெரும் போராட்டக்களமாக மாறியது.

    ஜனவரி 18: சென்னை முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிறுவனங்கள் அறிவித்தன. ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்தனர்.

    ஜனவரி 18: ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.

    ஜனவரி 19: ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் மோடியிடம் கோரிக்கை மனு அளித்தார். மேலும் டெல்லியில் தங்கி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஜனவரி 2௦: டெல்லியிலிருந்து திரும்பிய தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

    ஜனவரி 21: ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. அவசர சட்டத்தைத் தொடர்ந்து நாளை(22-௦1-17) காலை 1௦ மணிக்கு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×