search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் 4 மணிநேரம் கொட்டிய மழை
    X

    நீலகிரி மாவட்டத்தில் 4 மணிநேரம் கொட்டிய மழை

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. குன்னூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டு நகரமே இருளில் மூழ்கியது.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீருக்கே பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகிறார்கள். வன பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கிறது.

    மேலும் பகல் நேரங்களில் கடும்வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிபொழிவும் அதிகளவில் இருந்து வருவதால் நீலகிரி மாவட்டத்தின் உயிர் நாடியான தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மழையின்றி காய்கறி செடிகள் வாடி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக மழை அதிகரித்து கொட்டியது. கோத்தகிரி பகுதியில் அதிகளவில் கொட்டியது.

    நள்ளிரவு 11 மணிவரை 4 மணி நேரம் மழை கொட்டியது. இதே போல் குன்னூர் பகுதியில் இரவு 10 மணி முதல் 12.30 மணிவரை மழை கொட்டியது. இதன் காரணமாக குன்னூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டு நகரமே இருளில் மூழ்கியது.

    தொடர்ந்து விடிய, விடிய சாரல் மழை கொட்டி வருகிறது. அடர்த்தியான மேக மூட்டங்கள் நிலவி வருகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டப்படி வந்து செல்கிறது.

    வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த தேயிலை செடிகள் மற்றும் மலர் செடிகள், காய்கறி பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×