search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டம்: நாளையும் முக்கிய ரெயில்களை ரத்து செய்தது தெற்கு ரெயில்வே
    X

    ஜல்லிக்கட்டு போராட்டம்: நாளையும் முக்கிய ரெயில்களை ரத்து செய்தது தெற்கு ரெயில்வே

    ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நாளையும் முக்கிய ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் ரெயில்களில் புறப்படும் நேரங்களில் ஒருசில மாறுதல்களை தெற்கு ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இன்று பல்வேறு ரெயில்களை ரத்து செய்துள்ள நிலையில், நாளை மூன்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.

    நாளை (21-௦1-17) ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களின் விவரம்:

    56701 புனலூர்- மதுரை பயணிகள் ரெயில்

    56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரெயில்

    22623 சென்னை- மதுரை இடையிலான விரைவு ரெயில்

    இன்று (2௦-௦1-17) புறப்படும் இடங்களில் மாறுதல் செய்யப்பட்ட ரெயில்கள்:

    வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(17312) சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக காட்பாடியில் இருந்து இன்று (2௦-௦1-17) புறப்படும்.

    தாதர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்(11021) திருநெல்வேலிக்குப் பதிலாக இன்று (20.01.2017) கரூரிலிருந்து தாதர் புறப்படும்.

    சென்னை-தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693) மற்றும் சென்னை-கன்னியாகுமரி இடையிலான சென்னை

    எழும்பூர் எக்ஸ்பிரஸ்(12633) ஆகியவை இன்று (20.01.2017) சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை-காரைக்குடி இடையிலான பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையில் ரத்து செய்யப்படும்.
    Next Story
    ×