search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட அர்ச்சனா.
    X
    கைது செய்யப்பட்ட அர்ச்சனா.

    சேலம் வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண் கைது

    பேஸ்புக் மூலம் நட்பாக பழகி உல்லாசமாக இருக்கும் படத்தை காட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ராசிபுரம் வள்ளித் தெருவில் வசித்து வருகிறார். இவர் பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் பிரேம்குமார் (26).

    இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமாருக்கு பேஸ்புக் மூலம் செகந்திராபாத் கிழக்கு மோட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்கிற தம்பரின்தாஸ் (வயது 22) என்ற இளம்பெண் அறிமுகம் ஆனார்.

    இவர் பிரேம்குமாரை பெங்களூரில் நேரில் சென்று அடிக்கடி சந்தித்து நட்பாக பழகினார். அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் நெருக்கமாக இருந்தபோது அர்ச்சனா அதனை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டார்.

    அந்த படத்தை பிரேம்குமாரிடம் காட்டி ஆபாச படங்களை இணைய தளத்திலும், உனது பெற்றோரிடமும் காட்டிவிடுவதாக கூறி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

    இந்த படங்கள் வெளியானால் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து போய் அவர் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு வெளியில் யாரிடமும் சொல்லாமல் பிரேம்குமார் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அர்ச்சனா கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதியன்று மேலும் பணம் கேட்டு பிரேம்குமாரை மிரட்டினார். மேலும் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் அர்ச்சனா புகார் அளித்து, அதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேம்குமாரிடம் இருந்து 4 லட்சம் பணம் வாங்கினார்.

    ஆபாச படத்தை காட்டி பிரேம்குமாரிடம் இருந்து அதிகமாக பணம் பறிக்க திட்டமிட்டு அர்ச்சனா தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கடந்த 1-ந்தேதி சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள அவரது தாத்தா திருலோகனை சந்தித்து 1 கோடி பணம் கேட்டு மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த திருலோகன் பணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு தகவல் தருவதாக கூறி விட்டு இந்த சம்பவம் குறித்து சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தனர். இந்த நிலையில் அர்ச்சனாவிடம் பணம் கொடுப்பதாக கூறி பிரேம்குமார் அவரை சேலம் வரவழைத்தார். அர்ச்சனா சேலம் வந்த தகவலை அன்னதானப்பட்டி போலீசாருக்கு தெரிவித்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அர்ச்சனாவை கைது செய்து அவரிடம் இருந்த சொகுசு காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.


    பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்

    விசாரணையில் அர்ச்சனா வசதி படைத்த பல ஆண்களிடம் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி அவர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளார் என்பது தெரியவந்தது.

    அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×