search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் 20-ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடியில் 20-ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் வருகிற 20-ந்தேதி அன்று தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க, நீட் என்ற தகுதி தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்திய அரசு நீட் தகுதி தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. மாநில அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே மத்திய அரசு அறிவித்து உள்ள நீட் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி, மத்திய, மாநில அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதன் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மகால் அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் (தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி) தலைமையில் நடக்கிறது. கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னிலை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர்கள் அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×