search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று தர்ணா: மாணவர்கள் போராட்டத்துக்கு உதயகுமார் ஆதரவு
    X

    நாகர்கோவிலில் இன்று தர்ணா: மாணவர்கள் போராட்டத்துக்கு உதயகுமார் ஆதரவு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாணவர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
    நாகர்கோவில்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாணவர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த போராட்டத்தில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாணவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தவோ திசைமாற்றவோ நான் இங்கு வரவில்லை. இது ஜனநாயக நாடு. எனவே மாணவர்கள் போராட்டத்திற்கு போலீசாரும் அரசு அதிகாரிகளும் கடுகளவாவது மதிப்பு கொடுக்க வேண்டும்.

    இந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றி மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வன்முறையில் இறங்க கூடாது. அது நமது போராட்டத்தை பாதிக்கும். போலீசார் தாக்கினாலும் திருப்பி தாக்காமல் அமைதி வழியில் போராட வேண்டும்.

    அதே சமயம் நாம் எதற்கும் அஞ்ச கூடாது. மாணவர்களாகிய நீங்கள் தான் நாளைய தலைவர்கள். நான் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறேன். அந்த சமயத்தில் நான் 2½ ஆண்டுகள் இடிந்தகரையை விட்டு வெளியே வரவில்லை. மாணவர்கள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து போராட்டம் நடத்த வேண்டும். மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×