search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியை படத்தில் காணலாம்
    X
    வீராணம் ஏரியை படத்தில் காணலாம்

    வீராணம் ஏரி நீர்மட்டம் 41 அடியாக குறைந்தது சென்னைக்கு தண்ணீர் அளவு குறைப்பு

    வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வருவதால் 30 கன அடி தண்ணீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். தற்போது ஏரியில் 41.25 அடி தண்ணீர் உள்ளது.

    ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் வழக்கமாக தினமும் 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    தற்போது ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் 30 கன அடி தண்ணீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் கீழணையில் தண்ணீர் இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இதனால் ஏரியை நம்பி சாகுபடி செய்த சம்பா பயிர்களும் கருகி வருகிறது. போர்வெல் மூலம் சாகுபடி செய்த விவசாயிகளும் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×