search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறை: விளையாட்டு மைதானம் அருகே உலா வந்த சிறுத்தை
    X

    வால்பாறை: விளையாட்டு மைதானம் அருகே உலா வந்த சிறுத்தை

    வால்பாறையில் விளையாட்டு மைதானம் அருகே உலா வந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வால்பாறை:

    வால்பாறை நகர் பகுதிக்கு அருகில் உள்ளது கக்கன்காலனி. இந்த குடியிருப்பு பகுதியானது ஸ்டேன்மோர் எஸ்டேட் தேயிலைத் தோட்ட பகுதிக்கு அருகில் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் கக்கன்காலனி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு அந்த பகுதி குடியிருப்பைச்சேர்ந்த இளைஞர்கள் கால்பந்து விளையாடினர்.

    அப்போது குடியிருப்புக்கு அருகில் உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் தேயிலைத் தோட்ட பகுதியில் இருந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் தப்பி ஓடி பொதுமக்களிடம் கூறினர். அவர்கள் வந்து சிறுத்தையை மிரட்சியுடன் பார்த்தனர். பொதுமக்கள் கூடியதை பார்த்ததும் அங்கிருந்த சிறுத்தை தேயிலைத் தோட்டத்திற்குள் குதித்து ஓடி மறைந்தது. கடந்த மாதம் இந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி கன்று குட்டியை கடித்து கொன்றது. இதே பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

    எனவே வனத்துறையினர் சிறுத்தை கூண்டுவைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கக்கன்காலனி குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×