search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கார்த்திகை தீப திருவிழாவுக்கு 12-ந்தேதி நாகையில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக மண்டல அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நாகை மண்டல பொது மேலாளர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நாகை மண்டலம் சார்பில் 12-ந்தேதி (திங்கட்கிழமை) கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, பரக்கலக்கோட்டை, வைத்தீஸ்வரன் கோவில், எட்டுக்குடி ஆகிய ஊர்களுக்கு 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது நாகையில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்களும், பரக் கலக்கோட்டைக்கு 20 சிறப்பு பஸ்களும், வைத்தீஸ்வரன்கோவிலுக்கு 10 சிறப்பு பஸ்களும், எட்டுக்குடிக்கு 10 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நாகை, காரைக்கால், பொறையாறு, மயிலாடு துறை, சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேளாங்கண்ணி உள்ளிட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பஸ்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், குறித்த நேரத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×