search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
    X

    தஞ்சையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

    தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    வங்க கடலில் உருவான நாடா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1,2-ந் தேதிகளில் மழை பெய்தது. நேற்று மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இன்று டெல்டாவில் மழை இல்லை. அதற்கு பதில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதிகாலை முதல் காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு நிலவியது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்கள் முன் விளக்கை எரிய விட்டபடி சென்றனர். ஆனாலும் முன்னே செல்லும் வாகனங்கள் சரியாக தெரியாததால் கடும் அவதி அடைந்தனர்.

    கும்பகோணம், தஞ்சை அருகே உள்ள பூதலூரிலும் பனி மூட்டம் நிலவியது. அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலும் பனி அதிகம் காணப்பட்டது.

    பனி தொடங்கிவிட்டால் மழை இனி இருக்காது என்று பொதுவான நடைமுறை இருந்தபோதிலும் விவசாயிகள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர், நாகை மாவட்டத்திலும் இன்று காலை கடும் பனி மூட்டம் இருந்தது.
    Next Story
    ×