search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி 23 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
    X

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி 23 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

    கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 9-ந்தேதி மற்றும் 12-ந்தேதி 23 டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
    திருவண்ணாமலை:

    கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 9-ந்தேதி மற்றும் 12-ந்தேதி 23 டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. மகா தேரோட்டம் 9-ந்தேதியும் மற்றும் மகா தீபம் 12-ந்தேதியும் நடைபெறுகிறது.

    இதையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள 23 டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்எல் 3 மற்றும் எப்எல்4-ஏ மதுகூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை சின்ன கடைத்தெரு, ரவுண்டானா (கடை எண்-9249) திருவண்ணாமலை பஸ் நிலையம் வேங்கிகால் ஊராட்சி போளூர் ரோடு (கடை எண்-9251), திருக்கோவிலூர் மெயின் ரோடு (கடை எண்-9256), தண்டராம்பட்டு மெயின் ரோடு (கடை எண்-9257),

    ராமலிங்கனார் தெரு (கடை எண்-9258), செங்கம் ரோடு (கடை எண்-9259), செங்கம் ரோடு வீராக்குட்டைத் தெரு (கடை எண்-9260), வேட்டவலம் ரோடு (கடை எண்-9261), சிசி ரோடு (கடை எண்-9262), திருமஞ்சன கோபுர வீதி (கடை எண்-9264), தாமரை நகர் வணிக வளாகம் (கடை எண்-9266), முத்து விநாயகர் கோவில் தெரு (கடை எண்-9268), போளூர் ரோடு (கடை எண்-9269 மற்றும் 9272), நாச்சிமலை கிராமம் (கடை எண்-9271), கீழ் அணைக்கரை (கடை எண்-9462), வேலூர் மெயின் ரோடு (கடை எண்-9464), வேலூர் மெயின் ரோடு வணிக வளாகம் (கடை எண்-9489), கீழ்செட்டிப்பட்டு கூட்டுச் சாலை (கடை எண்-9473), நல்லவன்பாளையம் (கடை எண்-9476) மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி புறவழிச்சாலையில் உள்ள (கடை எண்-9465) டாஸ்மாக் கடைகளை டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 12-ந்தேதி மூடி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×