search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை
    X

    திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை

    திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்தாலும் பொதுமக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். பருவமழை பொய்த்துப் போனாலும் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒட்டன்சத்திரம், அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1890 ஹெக்டேரில் தக்காளி விளைகிறது. வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. இங்கிருந்து மதுரை, சேலம், திருச்சி, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்தாலும் பொதுமக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
    Next Story
    ×