search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    வங்க கடலில் நடா புயல் வந்து சென்ற பிறகு தமிழக-ஆந்திர எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    திருவள்ளூர்:

    வங்க கடலில் நடா புயல் வந்து சென்ற பிறகு தமிழக - ஆந்திர எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று காலை கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 418 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று 484 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர மழை தண்ணீர் 150 கன அடி வருகிறது.

    ஏரியில் 319 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    புழல் ஏரிக்கு வினாடிக்கு 476 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 83 கன அடி குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.

    சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் 270 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக 98 கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியில் 20 மி.மீட்டர் மழையும், புழல் ஏரியில் 14 மி.மீட்டர், சோழவரம் ஏரியில் 20 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 10 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளதால் ஏரிகளுக்கு மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×