search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியாக சரிந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியாக சரிந்தது

    மேட்டூர் அணையில் நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.29 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.20 அடியாக சரிந்தது.
    மேட்டூர்:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.

    கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 102 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் மறுநாள் 2-ந்தேதி நீர்வரத்து விநாடிக்கு 171 கன அடியாக அதிகரித்து. நேற்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 287 கன அடியாக உயர்ந்தது. இன்றும் நீர்வரத்து இதே நிலைத்தான் நீடிக்கிறது.

    அணையில் இருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.29 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.20 அடியாக சரிந்தது.



    Next Story
    ×