search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகரில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி
    X

    அண்ணாநகரில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

    அண்ணாநகரில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோயம்பேடு:

    அண்ணாநகர் சாந்தோம் காலனியை சேர்ந்தவர் முகமது ஹபீஸ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனிஷா பாத்திமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ந்தேதி இரவு வீட்டில் முகமது ஹபீஸ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டதாக அனிஷா பாத்திமா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் முகமது ஹபீசை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஹபீசின் சகோதரர் ஆதாம் மெஸ் கான் திருமங்கலம் போலீசில் தனது சகோதரரின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் செய்தார்.

    பிரேதபரிசோதனை அறிக்கையில் முகமது ஹபீஸ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி அனிஷா பாத்திமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

    போலீஸ் விசாரணையில் வெளிவந்த விவரம் வருமாறு:-

    அனிஷா பாத்திமா பாடி பள்ளிக்கூட தெருவில் உள்ள ஜிம்முக்கு செல்வார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த பிரேம் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த முகமது ஹபீஸ் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாலும் சொத்துக்களை அடையவும் அனிஷா பாத்திமாவும், கள்ளக்காதலன் பிரேம்குமாரும் முகமது ஹபீசை கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த 20-ந்தேதி இரவு முகமது ஹபீஸ் வீட்டிற்கு பிரேம்குமார் வந்தார். அங்கு முகமது ஹபீசின் கைகளை பிரேம்குமார் பிடித்து கொள்ள அனிஷா பாத்திமா அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து பிரேம்குமார் தப்பி சென்று விட்டார்.

    உடனே அனிஷா பாத்திமா கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக உறவினர்களிடம் நாடகமாடினார். இதை நம்பாத முகமது ஹபீஸ் சகோதரர் ஆதாம் மெஸ்கான் போலீசில் புகார் செய்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.

    கள்ளக்காதலன் பிரேம்குமாரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×