search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டில் வீசப்பட்டு கிடந்த ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை நகல்களை படத்தில் காணலாம்.
    X
    ரோட்டில் வீசப்பட்டு கிடந்த ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை நகல்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே சாலையில் கிடந்த ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை நகல்கள்

    திண்டுக்கல் அருகே சாலையில் கிடந்த ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் ரோட்டில் ஜெராக்ஸ் பேப்பருடன் உள்ள பெரிய கவர் ஒன்று கிடந்தது.

    அப்பகுதியில் சென்றவர்கள் எடுத்து பார்த்த போது, அதில் 180- க்கும் மேற்பட்ட பொது மக்களின் மார்பளவு உள்ள புகைப்படங்கள், ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைக்கான நகல்களும், வருமான வரி சம்மந்தமான பிரிண்ட் செய்யப்பட்ட சில பேப்பர்களும் இருந்துள்ளது. இதில் ஒரு ஒருபுகைப்படம் சின்னாளபட்டி பூஞ்சோலையில் சீட்கவர் தைக்கும் கண்ணன் என்பவரின் படமும் இருந்துள்ளது. இதனால் அந்த கவரை கீழே இருந்து எடுத்தவர் கண்ணனிடம் வந்து கொடுத்துவிட்டு சென்றார்.

    கீழே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சின்னாளபட்டி, அம்பாத்துரை, காந்தி கிராமம், நடுப்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் ஆகியோரின் படங்களும், அடையாள அட்டை நகல்களும் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சின்னாளபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆதார் உள்ளிட்ட அடையாள அவணங்களின் நகல்களை தவறவிட்டு சென்ற நபர் யார் ? பொது மக்களின் புகைப்படம் அவருக்கு எப்படி கிடைத்தது? கருப்பு பணத்தை மாற்றுவதற்காக ஒட்டு மொத்தமாக அடையாள அட்டை நகல்கள் கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×