search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழா: நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கார்த்திகை தீபத்திருவிழா: நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளார்.
    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் செல்வகோமதிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் வருகிற 12-ந் தேதி (திங்கட் கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற பஸ்கள் 11-ந் தேதி மாலை மற்றும் இரவில் புறப்பட்டு 12-ந் தேதி காலையில் திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது. தீப திருவிழா முடிந்த பிறகு 12-ந் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் புறப்பட்டு 13-ந் தேதி காலையில் இங்கே வந்து சேரும்.

    இந்த சிறப்பு பஸ்களில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்ய விரும்புகிற பயணிகளுக்காக முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய வருகிற 7ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×