search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குப்பதிவு 1 மணி நேரம் குறைப்பு
    X

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குப்பதிவு 1 மணி நேரம் குறைப்பு

    3 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் ஓட்டுப்பதிவு குறைய வாய்ப்புள்ளது.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 3 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று 2-வது நாளாக வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது.

    பொதுவாக தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். ஆனால் தமிழகத்தில் 19-ந் தேதி நடைபெற உள்ள 3 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைக் கப்பட்டுள்ளதால் ஓட்டுப் பதிவு குறைய வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கவும், அவர்களின் பதிவேடுகளை ஆய்வு செய்யவும் வருமான வரித்துறை ஆணையர் ஜீவன்பாட்சா செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக 3 குழுக்களும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×