search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை மனு தாக்கல்
    X

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை மனு தாக்கல்

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் ஓம்சக்தி சேகர் நாளை பிற்பகல் 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 3 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களும், புதுவையில் போட்டியிடும் ஓம்சக்தி சேகரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஓம்சக்தி சேகர் நாளை பிற்பகல் 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தட்டாஞ்சாவடி தொழில் வர்த்தக துறை அலுவலகத்துக்கு தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் அதிகாரி மலர்கண்ணனிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார்.

    புதுவையில் அ.தி.மு.க. தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி சம்பத், அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், புதுவை மாநில செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக தலைவர்கள் 4 பேரும் இன்று மாலை புதுவை வருகின்றனர். அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவர்களும் உடன் இருந்து தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி 2-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். புதுவையில் பிரதான எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுமா? இல்லையா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

    Next Story
    ×