search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் நடந்த பால்குட ஊர்வலத்தில் அ.தி.மு.க. தொண்டர் உயிரிழப்பு
    X

    சேலத்தில் நடந்த பால்குட ஊர்வலத்தில் அ.தி.மு.க. தொண்டர் உயிரிழப்பு

    சேலத்தில் நடந்த பால்குட ஊர்வலத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் சென்று உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள நெய்காரப்பட்டியில் காலை 7 மணி முதலே அ.தி.மு.க. தொண்டர்கள், பெண்கள் திரண்டிருந்தனர். காலை 10.15 மணிக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இடைப்பாடி பழனிசாமி பால்குட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, அதில் பங்கேற்ற 60 வயதுடைய அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விசாரணையில், இறந்தவர் பெயர் லட்சுமணன் (வயது 60) என்பதும், கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் தொண்டராக அவர் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கொண்டலாம்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் கூறுகையில், “மாரடைப்பால் தான் அவர் உயிரிழந்துள்ளார். இப்படி உடல் நலம் குன்றியவர்கள் ஊர்வலத்தில் செல்வதையும், வெயிலில் அலைவதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

    Next Story
    ×